குவைத்தில் சிக்கித் தவிக்கும் 10 மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து குவைத்துக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் 10 மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதம்:
''குவைத் காவல்துறையினரால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு அங்கு காவலில் உள்ள 11 இந்திய மீனவர்களின் அவலநிலை பற்றி தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் ஆக மொத்தம் 11 பேர் கடந்தாண்டு ஜூலை மாதம் உசேன் ரஷீத், முகமது ரஷீத் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் மீன்பிடி தொழில் செய்ய குவைத் சென்றனர்.

ஆறு மாதங்கள் மீன்பிடிப்பதற்கான நிபந்தனைப்படி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட இந்த மீனவர்களுக்கு உரிய பங்கு தரப்படவில்லை. இதனால் அங்கு பிழைப்பதற்கு வழியில்லாமல் சிரமப்படும் மீனவர்கள், தங்களை நம்பியுள்ள குடும்பத்தினருக்கு பணம் அனுப்பவும் முடியாமல் தவிக்கின்றனர்.
தங்களை வேலைக்கு அமர்த்தியவர்களிடம் இருந்து நியாயமான வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்ட இந்த மீனவர்கள் தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி கோரினர். அதற்கு அவர்கள் மறுத்தனர். பின்னர் வேலை ஏற்பாட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் உள்ளூர் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
ஒரு மாதத்திற்குப் பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், மீனவர்களின் பாஸ்போர்ட்டை வேலை ஏற்பாட்டாளர்கள் தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். இதன் காரணமாக மீனவர்களால் குவைத்தில் மீன்பிடி தொழில் செய்யவோ, இந்தியாவுக்கு திரும்பவோ முடியவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி குவைத்தில் உள்ள தூதரகத்துக்கு இந்திய வெளியுறுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தும்படி தாங்கள் உத்தரவிட வேண்டும். மீனவர்களுக்கான நியாயமான ஊதியம் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் இருக்கும் அவர்களது குடும்பத்தினர், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி வாடுவதால் இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications