ஓபிஎஸ், தினகரன் ஆதரவாளர்களிடையே கைகலப்பு.. போலீஸ் குவிப்பால் ஆர்.கே.நகரில் பதட்டம்
ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதட்டம் நிலவி வருகிறது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதி காலியானது அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

சசிகலா அதிமுக, பன்னீர்செல்வம் அதிமுக என அதிமுக கட்சி பிளவு பட்டுள்ளதால், இந்த தொகுதியில் அதிமுக அம்மா கட்சி (சசிகலா) சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா (ஓபிஎஸ்) அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர். டி.டி.வி. தினகரன் எப்படியாவது வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக 30 அமைச்சர்கள், 30 எம்பிக்கள், 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஆர்கே நகரில் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவி வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications