ஜெ. தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு: டிச.11ல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு வரும் 11.12.2013, 12.12.2013 மற்றும் 13.12.2013 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டின் முதல் நாள் 11.12.2013 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், 12.12.2013 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான கூட்டமும் நடைபெறும். 13.12.2013 அன்று காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறும்
இந்த மூன்று நாள் மாநாடு தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடியிலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications