வாவ்.. சென்னையின் முதல் அடுக்குமாடி பஸ் ஸ்டாண்ட்.. மாதவரத்தில் ரூ. 95 கோடியில்!
மாதவரத்தில் சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
Recommended Video

சென்னை: மாதவரத்தில் சுமார் 95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சிஎம்டிஏ மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வசதியுடன் பேருந்துகள் நிறுத்துவதற்கு புதிய புறநகர் பேருந்து நிலையத்தை கட்டியுள்ளனர்.

இந்த பஸ் நிலையத்தில் தரை தளத்தில் 51 பேருந்துகளும் மேல்தளத்தில் 50 பேருந்துகளும் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 மாநகரப் பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத், தெலுங்கானா ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது. மேலும் பயணிகள் வசதிக்காக தங்கும் வசதியும் கழிப்பிட வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications