முதல்வர் அணியினர் தினகரன், சசிகலா பற்றி தவறான தகவல் பரப்புகிறார்கள்: செந்தில் பாலாஜி புகார்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர், சசிகலா மற்றும் தினகரன் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று,தினகரன் ஆதரவு அணி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர், சசிகலா மற்றும் தினகரன் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று,தினகரன் ஆதரவு அணி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி பேசுகையில், எனது தொகுதியில் சிலரின் தூண்டுதலின் பேரிலேயே காணவில்லை என போஸ்டர் ஒட்டியுள்ளனர். எங்கிருந்தாலும் தொகுதிக்கான செயல்பாடுகள் தொய்வின்றி நடக்கும்.

சசிகலா, தினகரன் குறித்து முதலமைச்சர் அணியினர் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர். கட்சியை காப்பாற்றும் அண்ணன் தினகரனின் நடவடிக்கைகளுக்கு உறுதியாக அவர் பின்னால் இருக்கிறோம்.
சபாநாயகரின் கடிதம் இன்னும் வரவில்லை கடிதம் கிடைத்த பின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
இதே போல எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், வின் ப்ளவர் விடுதி அறைகள் 2 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் வேறு விடுதிக்கு மாறுகிறோம். தினகரன் இன்று புதுச்சேரி வருகிறார், அவருடன் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications