காஷ்மீரில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதி: அரசு அறிவிப்பு
காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில், கடந்த சில தினங்களாக பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குரேஷ் பகுதியில் இருந்த ராணுவ முகாம்கள் பனிச்சரிவில் சிக்கி முற்றிலும் புதைந்தது. இதில் இதுவரை 24 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ராணுவ வீரர்களின் பெயர் இளவரசன், சுந்தரபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இளவரசன், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கண்ணந்தங்குடியைச் சேர்ந்தவர். சுந்தர் பாண்டி மதுரையை சேர்ந்தவர். பனிச்சரிவில் புதையுண்டவர்களில் இதுவரை ஐந்து பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. பலரது உடல்களை தேடி வருகின்றன.
இதனிடையே உயிரிழந்த 2 ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நிவரண நிதியை உடனடியாக வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications