பீனிக்ஸ் பறவையாய் பிறப்பெடுக்கக் காத்திருக்கும் எங்கள் பேரறிவுத் தாயே! கவிதை பாடிய ஓ.பி.எஸ்
சென்னை: மன்னர்களை கவிதை பாடி வாழ்த்துவது அந்தக்காலம். இப்போதோ மாநில முதல்வரே சட்டமன்றத்தில் கவிதை பாடி கட்சித்தலைவியை வாழ்த்துக்காலம் ஆகிவிட்டது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.

அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புகழ் மாலை சூட்டி கவிதை பாடினார். உணர்ச்சிப்பிழம்பாக அவர்பாடிய கவிதையை படியுங்களேன்.
ஆறாம் முறை கழகத்தை ஆட்சித்
தேர்தனில் அமர்த்தி,
சூதுமதி, சூழ்ச்சிதனை
சுக்குநூறாய் நொறுக்கி,
தருமமே வெல்லும்,
பீனிக்ஸ் பறவையாய் பிறப்பெடுக்கக்
காத்திருக்கும் எங்கள் பேரறிவுத் தாயே !...
விழிப்புற்ற தமிழகத்திற்கு
விடையாக வந்த விடிவெள்ளியே !...
தங்கம் தருகிற கை எங்கள்
தங்கத் தாரகை என தாய்க்குலம் போற்றுகிற
சக்தியின் வடிவே !
சேற்றிலே பாடுபட்டு செந்நெல் விளைவிக்கிற
ஏற்றமிகு விவசாயிகள் வாழ்விலே
மாற்றத்தை உருவாக்க
காவேரியை மீட்டு வந்த கம்பீரமே !
முல்லை பெரியாறு காத்திட்ட
மூவேந்தர் ஓர் உருவே !.....
தடம் மாறிக் கிடந்த தலைமுறைக்கு
சரியான வழிகாட்டி,
சாதிக்கும் திறம் கூட்டி,
மதி செழிக்க மடிக்கணினி தந்த
மகராசியே !...
ஆற்றல்களின் பிரம்மமே !....
என்று கவிதை பாடினார் பன்னீர் செல்வம்.
கடந்த முறை குலசாமியே, தன்மானச்சிங்கமே என்று கவிதை பாடியவர் இம்முறை அதைவிட ஒருபடி மேலே போய் கவிதை வாசித்துள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications