ஓ.பன்னீர் செல்வம் பாதுகாப்புக்கு புதிதாக 10 பாடிகார்டுகள்!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாதுகாப்புக்கு புதிதாக 10 பாடிகார்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பாதுகாப்புக்காக 10 பாடிகார்டுகளை புதிதாக நியமித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பின் கை நாளுக்கு நாள் பலவீனமாகி வருகிறது. வேகமாக பலவீனமடைந்து வருகிறது. முதல்வர் பதவியைக் கைப்பற்ற சசிகலா தரப்பு கடுமையாக மோதி வரும் நிலையில் மக்கள் துணையுடன் அதை முறியடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

சசிகலா தரப்புடன் மோதல் வலுத்து வந்ததைத் தொடர்ந்து முதல்வரின் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரும் நியமிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் அவரது வீட்டுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. தொண்டர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கிறது. பல்வேறு தலைவர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் இந்த கூட்டத்திற்குள் சசிகலா தரப்பினர் ஊடுறுவி இடையூறு செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எளிமையானவர் என்றாலும் கூட தற்போது நிலைமை சரியாக இல்லை என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அவரது நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தற்போது முதல்வரின் பாதுகாப்புக்காக புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மெய்க்காப்பாளர்கள் போல அவர்கள் செயல்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை ஓ.பி.எஸ் தரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் போலீஸார் பாதுகாப்புடன் தற்போது இந்த பாடிகார்டு பாதுகாப்பும் முதல்வருக்கு கூடுதலாக சேர்ந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications