For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குல தெய்வம் கோவிலில் சசிகலாவிற்கு பூஜை செய்யப்போகும் முதல்வர் பழனிச்சாமி

முதல்வர் பழனிச்சாமி விரைவில் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா பெயரில் சிறப்பு பூஜை செய்யப்போகிறாராம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் பழனிச்சாமிக்கு குலதெய்வம் கோவிலில் நேர்த்திக்கடன் இருக்கிறதாம். விரைவில் அந்த கோவிலுக்கு செல்ல உள்ளதாகவும், சசிகலா பெயரில் பூஜை செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அதிகம் பிசியாகிவிட்டார். தினசரியும் நெற்றியில் விபூதி, குங்குமம் சகிதமாக அலுவலகம் வருகிறார்.

இந்த விபூதி ஸ்பெஷல் விபூதியாம். அவரது மனைவி குலதெய்வம் கோவிலில் பூஜை செய்து கொண்டு வந்து கொடுத்ததாம். அதைத்தான் தினசரியும் நெற்றியில் வைத்துக்கொண்டு வருகிறாராம்.

முதல்வரின் குலதெய்வம்

முதல்வரின் குலதெய்வம்

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம்தான் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊர். சிலுவம்பாளையம் அருகே உள்ள நெடுங்குளம் என்ற ஊரில்தான் பழனிசாமியின் குலதெய்வம் கோயில் இருக்கிறது.

குடும்பத்தினர் வேண்டுதல்

குடும்பத்தினர் வேண்டுதல்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே பழனிசாமிதான் முதல்வராவார் என பேசப்பட்டது. அப்போதே அவர்களின் குடும்பம் அந்த குல தெய்வம் கோயிலுக்கு வேண்டுதல் வைத்தார்களாம்

மனைவி பூஜை

மனைவி பூஜை

3 மாதம் கழித்து எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதும், அவரது மனைவி அந்த கோயிலுக்குப் போய் சிறப்பு பூஜைகளை செய்து விபூதி கொண்டு வந்திருக்கிறார். பழனிசாமி தினமும் அதனை நெற்றியில் வைத்துக்கொண்டுதான் அலுவலகம் கிளம்புகிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளிலும் பளிச்சென்று விபூதியுடன் சட்டசபைக்குள் நுழைந்தார்.

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

குடும்பத்தினர் வைத்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற விரைவில் முதல்வர் பழனிசாமி அந்தக் கோயிலுக்கு செல்ல உள்ளார். இப்போது சசிகலா சிறையில் இருக்கிறார். இந்த நேரத்தில் சொந்த ஊர் போனால் எதுவும் சிக்கலாகி விடும் என யோசிக்கிறாராம் பழனிச்சாமி. கோயிலுக்குப் போனாலும், அது சசிகலாவுக்கான வேண்டுதலாக இருக்கும்படி பூஜை செய்யுங்கள் என்றும் கூறியிருக்கிறாராம்.

English summary
Tamil Nadu chief Minister Edapadi Palanisamy will visit Kuladeivam temple near Salem to offer prayer Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X