ஹய்யயய்யோ..... மொத்தம் 168... அறிவி்ப்புகளை விட அதிகமான “மாண்புமிகு அம்மா” துதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 2015 ஆம் ஆண்டிற்கான வரியில்லா பட்ஜெட்டினை தாக்கல் செய்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யாமல் வாய் ஓய்ந்து போகின்ற அளவிற்கு "அம்மா" புகழ் பாடவும் தவறவில்லை.

கிட்டதட்ட 168 தடவைக்கு மேலாக "மாண்புமிகு அம்மா" என்ற வார்த்தையினை உபயோகித்துள்ளார் அவர் தன்னுடைய பட்ஜெட் உரையில். தொடக்கத்தில்யே ஒரு அரை மணி நேரத்திற்கு அன்னையின் புகழ் பாடி பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர், மூச்சுக்கு மூன்று தடவை "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா" என்பதை சொல்ல மறக்கவே இல்லை. நடுவில் மூச்சு விடக் கூட சில இடங்களில் மறந்த போதிலும்.

CM praises “AMMA” in budget…

கட்சிகள், தலைவர், எதிர்கட்சிகள், அரசியல் எதுவாக வேண்டுமானலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஒரு பொறுப்பான பதவியில், அதுவும் மக்களை கட்டிக் காக்கும் நாற்காலியில் இருக்கின்ற முதல்வரான ஒருவர், ஜனநாயக நாட்டில் மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுகின்ற நேரத்தில், தனி மனிதர் ஒருவரின் புகழ் பாடியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கூறுவதற்கு எதிர்க் கட்சிகளைச் சார்ந்து இருப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த புகழுக்குச் சொந்தக்காரருக்கே ஒரு கட்டத்திற்கு மேலாக காதில் ரத்தம் வந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காதவர்கள் மட்டுமே மக்களை ஆள்கின்ற பதவியில் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி. அதுதான் ஒரு சிறந்த தலைமைப் பண்பிற்கான அடிப்படைச் சூத்திரம்.

மதிப்பு என்பது ஒருவருடைய தகுதிக்கான அங்கீகாரமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லா தருணங்களிலும் அவருடைய புகழைப் பற்றி கூவிக்கொண்டே இருப்பதில் இல்லை..

இதை என்றுதான் புரிந்துகொள்ளப் போகின்றார்களோ நம் ஊரின் "மாண்புமிகு!" அரசியல்வாதிகள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+