Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

122 ஆண்டுகளில் இல்லாத மழை.. சீரிழந்த சீர்காழி! இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் சீர்காழிக்கு பயணம் மேற்கொண்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடையாமல், வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை பகுதியில் சனிக்கிழமை அதிகாலை கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

பெருமழை

பெருமழை

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை அதிகாலையும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெருமழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து உள்ளது.

சீர்காழி

சீர்காழி

அதிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 மணிநேரத்தில் 44 செ.மீ க்கு மேல் மழை பதிவானது. கடந்த 2015 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் ஒரே நாளில் 49 செண்டி மீட்டர் மழையும், நெய்வேலியில் 48 செண்டி மீட்டர் மழையும் கொட்டியது. 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு கடலோர பகுதியில் பெய்த பெருமழை இதுவாகும்.

44 செண்டி மீட்டர்

44 செண்டி மீட்டர்

கடந்த 2008 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பெய்த 66 செண்டி மீட்டர் மழைப்பொழிவே இன்று வரை தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும். அதற்கு அடுத்தப்படியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சனிக்கிழமை 44 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளக்காடு

வெள்ளக்காடு

இந்த பெருமழையின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழையால் ஆறு உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

விளை நிலங்கள்

விளை நிலங்கள்

ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வரும் இப்பகுதியில், தற்போது சம்பா தாலடி நடவு செய்யப்பட்டு முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கனமழையால் விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன. பயிர்கள் அழுகி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.

விவசாயிகள் வேதனை

விவசாயிகள் வேதனை

கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர். வெள்ள நிவாரணத்துடன் பயிர் காப்பீட்டையும் அரசு விரைந்து வழங்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத பெரு மழையாக இது பார்க்கப்படுகிறது.

நிவாரண முகாம்கள்

நிவாரண முகாம்கள்

சீர்காழியில் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் இதுவரை மொத்தம் 32 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் 7,156 குடும்பங்களை சேர்ந்த 16, 577 பேர் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இடி, மின்னல் காரணமாக 10க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் வெடித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சீர்காழியில் பெருமழை பெய்த உடனே அப்பகுதிக்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியும் சீர்காழி சென்று மின் பாதிப்புகளை பார்வையிட்டார்.

முதலமைச்சர் ஆய்வு

முதலமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்தார். இதற்காக நேற்று இரவு சீர்காழிக்கு புறப்பட்டுச் சென்ற அவர், புதுச்சேரியில் தங்கினார். இன்று கடலூரில் ஆய்வு செய்துவிட்டு சீர்காழிக்கு அவர் செல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+