ரூ.5000 லஞ்சம் பெற்றதாக கோவையில் கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் கைது
ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் வழக்கு ஒன்றில் துறை ரீதியான விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்களூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உரம் விநியோகம் செய்து வந்துள்ளார். அதில் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும் கருப்புசாமி தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து கருப்பசாமி மீது துறைரீதியான விசாரணையை தாமதப் படுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் வசந்தராஜ் என்பவர் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக கருப்பசாமி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் படி ரசாயணம் தடவிய பணத்தை வசந்தராஜிடம் வழங்கியுள்ளார். பணத்தை வசந்தராஜ் பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகதிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications