நாகை - கடலூர் கடல்பகுதியில் விமானத்தின் சமிக்ஞை? தேடுதல் வேட்டையில் நீர்மூழ்கிகள்!
சென்னை: சென்னையில் ஆபரேஷன் ஆம்லா பாதுகாப்பு ரோந்துப் பணியில் காணாமல் போன சிறிய ரக விமானத்தின் பாகத்திலிருந்து நாகை-கடலூர் கடல் பகுதியிலிருந்து சமிக்ஞை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களும் இத் தேடுதல் வேட்டையில் மும்முரமாகியுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் புறப்பட்ட சிறிய ரக விமானம் இரவு 9.30 மணி அளவில் ரோந்து பணிகளை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பி இருக்க வேண்டும்.

புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையில் பறந்து கொண்டிருந்த போது விமானம் திடீரென மாயமானது. கடைசியாக திருச்சி ரோடாரில் விமானத்தில் சிக்னல் பதிவாகி உள்ளது. அதன் பின்னர் விமானம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை.
இதையடுத்து தமிழக கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மத்திய பாதுகாப்பு படை ஐ.ஜி. சர்மா ஆகியோர் மாயமான விமானத்தை தேடிக்கண்டு பிடிக்கும் பணியை தொடங்கினர்.
விமானம் மாயமானதால் ஆபரேசன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை ரத்து செய்யப்பட்டது. இதற்கு ஆயத்தமான அத்தனை அதிகாரிகளும், உள்ளூர் போலீசாரும், விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான 8 கப்பல்கள், அதிநவீன 10 படகுகள் ஆகியவை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை தொடர்ந்து நேற்று இரவும் விடிய விடிய நடைபெற்றது.
இதுதவிர தமிழகம் முழு வதும் 14 கடலோர மாவட்டங்களும் உஷார்படுத்தப்பட்டன. மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகை- கடலூர் கடல்பகுதியில் விமானத்தின் பாகம் ஒன்றிலிருந்து சமிக்ஞை கிடைத்துள்ளதுதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் 10 ரோந்து கப்பல்கள், 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் குட்டி விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் மாயமான விமானம் கடலுக்கடியில் மூழ்கி இருக்கலாம் என்பதால் நீர்மூழ்கிக் கப்பல்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications