கட்டிப்பிடி கட்டிபிடிடா – சாலையில் பெண்களை கண்டமேனிக்கு கட்டிப்பிடித்த இளைஞர் கைது
கோவை: கோவையில் சாலையில் நடந்து போகும் இளம்பெண்களை கட்டிப்பிடித்து வந்த மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை புலியகுளம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களை ஒரு வாலிபர் வேகமாக ஓடிவந்து கட்டிபிடிப்பதும், பின்னர் அந்த பெண்கள் சத்தம் போடும்போது அந்த வாலிபர் ஓடிவிடுவதுமாக இருந்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும், பெரும்பாலும் அந்தப்பகுதியிலுள்ள மகளீர் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களை குறிவைத்து அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதாகவும் ராமநாதபுரம் போலீசுக்கு புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து அந்த வாலிபரை பிடிக்க ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் திட்டமிட்டார். இதற்காக கடந்த சில நாட்களாக காலை, மாலை நேரத்தில், பெண்கள் விடுதி அருகில் கூலி தொழிலாளிகள் போல சாதாரண உடையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் சில காவலர்கள் நின்று கண்காணித்து வந்தனர்.
நேற்றுகாலை, வழக்கம் விடுதியிலிருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்து புலியகுளம் பேருண்டு நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு வாலிபர் திடீரென்று நடந்து சென்றுகொண்டிருந்த அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்தார்.
அந்த பெண் கூச்சல் போட்டபடி தப்பி ஓடினார். இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் அவரை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தார்.
பிடிபட்ட வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில், புலியகுளம் நாராயணசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த இன்பன்ட் டேனியல் என்றும், அங்குள்ள ஒரு இருசக்கர வாகன பட்டறையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
போலீசார், வாலிபர் இன்பன்ட் டேனியலிடம் விசாரணை நடத்தியபோது, அழகான பெண்களை பார்த்தால், மோகத்தில் தன்னை அறியாமலேயே கட்டிப்பிடித்து விடுவதாக தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications