காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருந்தோம்: அப்போதுதான்.. கலெக்டர் பிஏ கொலையில் கள்ளக்காதலி திடுக் தகவல்!
புதுக்கோட்டை கலெக்டர் பிஏ கொலையில் டைப்பிஸ்ட் சவுந்தர்யா திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video

புதுக்கோட்டை: கலெக்டர் பிஏ பூபதி கண்ணன் கொலையில் உடன் பணிபுரிந்த டைப்பிஸ்ட் சவுந்தர்யா திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த பூபதி கண்ணன் கடந்த 28ஆம் தேதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மர்மமாக இருந்த இந்த கொலை வழக்கில் துப்பு துலங்க போலீசார் பூபதி கண்ணனின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் பூபதி கண்ணன் தன்னுடன் பணியாற்றும் டைப்பிஸ்ட் சவுந்தர்யாவுடன் நீண்ட நேரம் போனில் பேசியது தெரியவந்தது.

சாதித்த சவுந்தர்யா
இதையடுத்து சக பெண் ஊழியரான டைபிஸ்ட் சவுந்தர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என சாதித்து வந்தார் சவுந்தர்யா.

கள்ளத்தொடர்பு ஒப்புதல்
பின்னர் தனக்கும் பூபதி கண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டார் சவுந்தர்யா. இதனால் நிச்சயம் ஏதாவது தகவல் கிடைக்கும் என சவுந்தர்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர் போலீசார்.

முதல் கள்ளக்காதல்
சவுந்தர்யாவின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் பெருவளநல்லூர் ஆகும். இவரது கணவர் சுரேஷ். இவர் கரூர் மாவட்டம் குளித்தலையில் வேளாண்மை துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இருவரும் குளித்தலையில் வசித்து வந்தனர். முன்னதாக சவுந்தர்யா சொந்த ஊரான பெருவளநல்லூரில் திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் அவருடன் உறவை தொடர்ந்துள்ளார்.

கணவர் தற்கொலை
இந்த விஷயம் சுரேசுக்கு தெரியவரவே அவர் சவுந்தர்யாவை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சவுந்தர்யா முன்னாள் காதலனுடனான கள்ள உறவை விட மறுத்துள்ளார். இதில் ஏற்பட்ட விரக்தியில் சுரேஷ் தற்கொலை செய்திருக்கிறார்.

கள்ளக்காதலன் உதவி
அதன்பின் கருணை அடிப்படையில் சவுந்தர்யாவிற்கு வேளாண்மை துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் முன்னாள் காதலன் நாவல்பட்டு அண்ணாநகர் அருகே அவருக்கு வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்துள்ளார். சவுந்தர்யாவுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

பூபதி கண்ணனுடன் கள்ளக்காதல்
இந்தநிலையில் சவுந்தர்யாவுக்கு அலுவலகத்தில் பணியில் இருந்த பூபதி கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானது. பூபதி கண்ணன் திருச்சி ராஜா காலனியில் இருந்து தினமும் புதுக்கோட்டைக்கு காரில் சென்று வந்தார். அப்போது, சவுந்தர்யாவையும் உடன் அழைத்து சென்றார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதலன்
இந்த விஷயம் சவுந்தர்யாவின் முன்னாள் காதலனுக்கு தெரியவந்தது. அவர் பூபதி கண்ணனுடனான பழக்கத்தை கைவிடுமாறு சவுந்தர்யாவை கண்டித்துள்ளார். மேலும் பூபதி கண்ணனையும் எச்சரித்தார். ஆனால் சவுந்தர்யா ஒரே நேரத்தில் 2 பேருடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.

பூபதி கண்ணன் கொலை
இந்நிலையில்தான் பூபதி கண்ணன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சவுந்தர்யாதான் அவரை கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டியதாக கூறப்பட்டது.

திடுக்கிடும் வாக்குமூலம்
இந்நிலையில் சவுந்தர்யா திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ஒரே அலுவலகம் என்பதால் பூபதி கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன்.

காட்டுப்பகுதியில் உல்லாசம்
முதலில் அலுவலக ரீதியிலான எங்கள் பழக்கம் பின்னர் நெருக்கமாகி உடலுறவு வரை சென்றது. தினமும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வரை பூபதி கண்ணனுடன் காரில் செல்வேன். வீட்டுக்கு திரும்பும்போது மாத்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நானும் பூபதி கண்ணனும் உல்லாசமாக இருப்போம்.

வழக்கம்போல உல்லாசம்
பின்னர் மாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி விட்டிற்கு சென்றுவிடுவேன். கடந்த 27ஆம் தேதிமாலை வழக்கம்போல வீடு திரும்பிய போது அந்த காட்டுப்பகுதியில் இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் பூபதி கண்ணன் சிறுநீர் கழிக்க சென்றார்.

நானும் குத்தினேன்
சற்றுநேரத்தில் கத்திக்குத்து காயங்களுடன் அலறியபடி ஓடி வந்தார். அவரை விரட்டியபடியே கையில் கத்தியபடி வந்த நபர் ஒருவர் கத்தியை என் கையில் கொடுத்து என்னையும் குத்துமாறு கூறி மிரட்டினான். அதனால் நானும் குத்தினேன்.

சங்கிலியை கழட்டு..
பின்னர் அந்த கத்தியை வாங்கி மீண்டும் பூபதி கண்ணனை குத்திவிட்டு அந்த நபர் ஓடிவிட்டான். பூபதி கண்ணன் கார் அருகில் சரிந்து விழுந்ததை தொடர்ந்து அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை எடுத்துக்கொண்டு நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். கத்தியால் குத்தியவர் யார் என்று எனக்கு தெரியாது. இவ்வாறு சவுந்தர்யா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications