சென்னையில் பரிதாபம்.. போலீசுக்கு பயந்து வேகமாக பைக் ஓட்டிய கல்லூரி மாணவன் பலி!
சென்னையில் வேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை: சென்னையில் போலீசாருக்கு பயந்து வேகமாக பைக்கை ஓட்டிய கல்லூரி மாணவர் ஸ்பீட் பிரேக்கரில் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நம்மாழ்வார் பேட்டை சுப்புராயன் தெருவில், சலூன் கடை நடத்தி வருபவர் நீல கிருஷ்ணன். இவரது 2வது மகன் முகிலன். மீனாம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரில் பி.ஏ., படித்து வந்தார். இவர், அதிகாலை 2 மணிக்கு அவரது நண்பர்கள் கிஷோர், சந்தோஷ் ஆகியோருடன் தெருவில் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் மற்றொரு நண்பரது பைக்கை வாங்கி கொண்டு சேத்துப்பட்டு பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக சென்றனர். பைக்கை முகிலன் ஓட்டினர். அவருக்கு பின்னால் கிஷோரும், சந்தோஷும் உட்கார்ந்திருந்தனர். அவர்களது பைக் கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு கீழ்ப்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
முகிலனிடம் லைசென்ஸ் இல்லாததால் போலீசாரை பார்த்ததும் வண்டியை திருப்பியுள்ளார். கிஷோர், சந்தோஷ் பைக்கில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசாரிடம் சிக்க கூடாது என வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளார் முகிலன். ஆம்ஸ் சாலையில் வேகமாக வரும்போது ஸ்பீட் பிரேக்கரில் தாண்டும் போது, நிலை தடுமாறி தலைக்குப்புற கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் அவரின் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications