பாஜகவுக்கு எதிராக ஒன்று திரளுவோம்.. "அரசியல் அழைப்பு"டன் முடிந்த கருணாநிதி நினைவேந்தல்!
Recommended Video

சென்னை: "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் தொடங்கியது.
இரங்கல் கூட்டமாக இருந்தாலும் இது பாஜகவுக்கு எதிராக அனைவரையும் அணி திரளுமாறு மறைமுகமாக தட்டி எழுப்பிய கூட்டமாக மாறிப் போனது.

கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர் விவரம்:
முன்னாள் பிரதமர் தேவெகௌடா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பாஜக சார்பில் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் இதில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் வந்திருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பல தலைவர்களும் பாஜகவுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்துப் பேசினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications