ஜெ. மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆணையம் விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் உத்தரவிட்டார். ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆட்சியாளர்கள் சொல்வதைத்தான் கேட்பார் என சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விரைவில் விசாரணை
அதாவது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்கக்கூடாது என கூறுவது நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்றார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ள ஆணையம் விசாரணையை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

முறையாக விசாரணை
விசாரணை ஆணையம் முறையாக விசாரணையை நடத்தும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்பினார்கள் என்றும் அவர் கூறினார்.

இணைப்புக்கு இடமில்லை
மக்கள் விரும்பிய படியே சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். மேலும் சசிகலா மற்றும தினகரனை மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தம்பிதுரைக்கு எதிராக
அதிமுக எம்பி தம்பிதுரை சசிகலாவும் தினகரனும் விரைவில் அதிமுகவில் வந்து சேர்வார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications