தியாகு உண்ணாவிரதம்.. கைவிட நடவடிக்கை கோரி கருணாநிதிக்கு மன்மோகன்சிங் கடிதம்

இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் மன்மோகன் சிங்கை, தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்கின்ற கோரிக்கையினை வற்புறுத்தி கேட்டுக்கொண்டார்.
4 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டு போரின்போது, ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கை தமிழர்களின் உயிரைப் பறித்த, சிங்கள இனவெறி அரசு நடத்தும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற தமிழகத்தின் ஒருமித்த குரலுக்கு பிரதமர் செவி சாய்க்கவேண்டுமென்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் - மாணவர்களும் - உலகத் தமிழ் இன அமைப்புகளும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து போராடி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 12 நாட்களுக்கு மேல் இதே பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர் தியாகுவின் உடல் மோசமாகி வரும் நிலை பற்றியும், விரிவாக எடுத்துரைத்தார்.
இதனை கவனமுடன் கேட்டறிந்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த பிரச்சினை குறித்து தி.மு.க. மற்றும் தமிழக மக்களுடைய உணர்வுகளை மதித்து உரிய நல்ல முடிவுகளை எடுப்போம் என்றும்; தி.மு.க. தலைவர் கருணாநிதி தலையிட்டு, உண்ணாவிரதம் இருந்து வரும் தியாகு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications