மதவெறி அரசியல் காரணமாக ஜனநாயகம் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது.. டி ராஜா ஆவேசம்!
மதவெறி அரசியல் காரணமாக ஜனநாயகம் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: மதவெறி அரசியல் காரணமாக ஜனநாயகம் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். மதவெறியாளர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வைரவிழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அவர் சரமாரியாக குற்றம்சாட்டினார்.

ஜனநாயகம் அழியும் சூழல்
மதவெறி அரசியல் காரணமாக ஜனநாயகமே அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாட்டையே சீரழிக்கும் மதவெறியாளர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

முதற்படியே வைரவிழா
மதவெறியாளர்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கான முதற்படியே நேற்று நடைபெற்ற வைரவிழா நிகழ்ச்சி என்றும் டி ராஜா தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி
இந்தியாவில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

விவசாயிகள் பாதிப்பு
விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக டி ராஜா கூறினார். விவசாயிகள் முன்னேற்றத்திற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கட்சிகளிடையே ஒருமித்த கருத்து
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதித்து வருவதாக அவர் கூறினார். குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து 17 கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகவும் டி ராஜா தெரிவித்தார்.

மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும்
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்ற அவர், குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுபவர் இந்திய அரசியல் சட்டத்தை உயர்த்தி பிடிப்பவராக இருக்க வேண்டும். மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி ராஜா தெரிவித்தார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications