ஜெ., காலடியில் சொர்க்கம் இருக்கிறது.. இஸ்லாமை இழிவுபடுத்தியதாக பாத்திமா பாபு மீது வழக்கு
சென்னை: ஈரோட்டில், கடந்த 19ம் தேதி இரவு, அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாத்திமாபாபு, இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அதிமுக ஸ்டார் பிரச்சார பிரமுகரான பாத்திமா பாபு மீது தேர்தல் அலுவலரிடம் அக்கட்சி கொடுத்துள்ள புகார்:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில், அதிமுக, சார்பில், பாத்திமாபாபு பிரசாரம் செய்தார். அப்போது, இஸ்லாமியர், தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முகமது நபிகள், ஒவ்வொருவரின் தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
அப்படி பார்க்கையில், ஜெயலலிதா அம்மாவின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது. எனவே, முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று அவர் பேசினார்.
தேர்தலுக்காக பிரசாரம் செய்ய வருபவர்கள், அவர்கள் செய்த சாதனைகளையும், எதிர்கால திட்டத்தை பற்றி பேசி, ஓட்டு சேகரித்துக்கொள்ளட்டும். இறைவனையும், இறைதுாதர்கள் பற்றியும் பேசி, எந்த மதத்தவரின் மனதையும் புண்படுத்தக் கூடாது. எனவே, பாத்திமாபாபு பிரசாரத்துக்கு தடை விதித்து, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்றால், பாத்திமாபாபு பிரசாரம் செய்யும் பகுதிகளில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்யப் படும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
-
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு












Click it and Unblock the Notifications