கம்யூட்டர் பயிற்சி மையத்தில் மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியர் கைது
செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் கம்யூட்டர் பயிற்சி மையத்தில் படிக்க வந்த மாணவியிடம் ஆபாச படம் காட்டி சில்மிஷம் செய்ய முயன்ற ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை கீழபஜார் பகுதியில் நியூ கம்ப்யூட்டர் என்ற நிறுவனத்தை பூலாங்குடியிருப்பு பகுதியைசார்ந்த சாகுல்ஹமீது என்பவர் நடத்திவருகிறார். இந்த பயற்சி மையத்தில் கோடைவிடுமுறையை முன்னிட்டு மாணவிகள் ஏராளமானவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர்.

நேற்றுமாலை 5மணியளவில் சிந்துமதி என்ற மாணவி வகுப்புக்கு சென்றுள்ளார்.அப்போது ஆசிரியர் சாகுல் ஹமீது மட்டும் இருந்துள்ளார். மாணவ ,மாணவிகள் யாரும் அங்கு இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர் மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். பின்னர் சில்மிசத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சியடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். இரவில் தன் தாயிடம் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். அவர் தனது கணவரிடம் விபரத்தை தெரிவித்தார். இதனையடுத்து இன்றுகாலையில் மாணவியின் பெற்றோர்,உறவினர்கள் கணினி பயிற்சி பள்ளியில் சென்று விபரம் கேட்டனர். அதற்கு ஆசிரியர் சாகுல்ஹமீது மறுத்துள்ளார்.

உடனே மாணவியை வரவழைத்து விபரம் கேட்க அவர் நடந்த சம்பவத்தை சொன்னார். உடனே உறவினர்கள் பெற்றோர் ஆசிரியரை திட்டியதோடு கணிணி மையத்தில் இருந்த சேர்களை சேதப்படுத்தினர். அதற்குள் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவவே ஏராளமானோர் பயற்சி மையம் முன்பு கூடினர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்துவந்து பொதுமக்களிடம் சாமதானம் பேசினர்.அதனை கேட்காதவர்கள் தீடிரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கோட்டை இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துவிட்டதாக கூறவே அதன்பின் அனைவரும் காவல் நிலையம் நோக்கி சென்றனர்.
தென்காசி ஏ.எஸ்.பி.அரவிந்தன் விரைந்துவந்து நேரடிவிசாரணை நடத்தினார்.பின்னர் அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களையும் கைதுசெய்தார்.
அவர்கள் பெயர்கள் வருமாறு;
பேச்சிமுத்து(52)த/பெ;செல்லையா ,வெள்ளைசாமி.(46)பேச்சிமுத்து (64)பரமசிவம்(46)ராமகிருஷ்ணன்(40)வன பேச்சி (45)ஆறுமுகம்(25)ஆறுமுகம்(33)சுந்தரராஜ்(43)சுடலையாண்டிஉள்ளிட்ட 10பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரச்சினைக்குக் காரணமான ஆசிரியர் சாகுல்ஹமீதையும் போலீசார் செய்தனர் அனைவரும் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications