கோவையை விட்டு வெளியேறக் கூடாது.. பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு கண்டிஷன் பெயில்!
லஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை: லஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பதவி இடத்திற்கு சுரேஷ் என்பவர் துணைவேந்தர் கணபதியை சந்தித்தார். அப்போது துணைவேந்தர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுரேஷ் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.29 லஞ்சம் காசோலையை சுரேஷிடம் கொடுத்து அனுப்பினர்.

கணபதிக்கு லஞ்சம்
சுரேஷ் கடந்த 3ஆம் தேதி காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தரின் இல்லத்திற்கு சென்றார். அங்கு துணைவேந்தர் கணபதியை சந்தித்து ரூ.1 லட்சம் பணமும், ரூ.29 லட்சத்துக்கு காசோலையும் கொடுத்ததாக தெரிகிறது.

கைதான கணபதி
அப்போது அங்கு மறைந்திருந்த கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.க்கள் தட்சிணாமூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கணபதிக்கு ஜாமீன்
கடந்த ஒரு மாதமாக சிறையில் இருந்த கணபதி பலமுறை ஜாமீன் கேட்டு மனு செய்தார். இந்நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கணபதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையை விட்டு
மேலும் பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், கோவையை விட்டு வெளியேறக் கூடாது, மறு உத்தரவு வரும் வரை லஞ்ச ஒழிப்பு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications