திரும்பவும் ‘மோதிரத்தால்’ சிக்கல்... என்ன செய்யலாம் ம.ந.கூட்டணி தலைவர்கள் குழப்பம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அக்கட்சிக்கு மோதிரம் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனால் பெரும் குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
தேமுதிக - மக்கள்நலக்கூட்டணி - தமாகா ஆகிய கட்சிகள் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் மக்கள் நலக்கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது.
தேர்தல் சின்னமாக அக்கட்சிக்கு மோதிரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மோதிரம் பரிசு...
அதனைத் தொடர்ந்து வைகோ, திருமாவளவனுக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்தார். அதை எப்போதும் கையிலேயே அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் அன்புக் கட்டளை இட்டிருந்தார். அதுவரை யார் அளித்த மோதிரத்தையும் அணியாத திருமாவும், வைகோவின் அன்புப் பரிசை கைகளில் அணிந்து கொண்டார்.

பாக்கெட்டில் பத்திரம்...
ஆனால், சில நாட்களிலேயே திருமாவின் கையில் இருந்த மோதிரம் காணாமல் போனது. இதனால் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே மோதல் என்ற செய்தி வேகமாகப் பரவியது. இதைக் கேட்டுப் பதறிப்போன திருமா, மோதிரத்தை பத்திரமாக சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பதாக விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

தேர்தல் சின்னம்...
இந்நிலையில் மோதிரம் வாயிலாக மக்கள் நலக்கூட்டணிக்கு வேறொரு பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அதாவது விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மோதிரம் சின்னத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சுயேட்சைகளுக்கும்...
ஆனால், மோதிரம் சின்னம் விடுதலை சிறுத்தைகளுக்கு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் சுயேட்சைகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாத தொகுதிகளில் போட்டியிடும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சறுக்கல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குழப்பம்...
ஏனெனில் மோதிரம் விடுதலை சிறுத்தைகளின் சின்னம் என நினைத்து பல தொகுதிகளில் வாக்காளர்கள் சுயேட்சைகளுக்கு வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கிறது. இதனால், எப்படி இந்த குழப்பத்தை சமாளிப்பது என்ற யோசனையில் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் ஆழ்ந்துள்ளனராம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications