காங். தலைமை உத்தரவிட்டால் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி: நடிகை நக்மா அறிவிப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சி தலைமை உத்தரவிட்டால் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையும் தமிழகம், புதுவை மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான நக்மா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் கடந்த ஆண்டு இணைந்த நடிகை நக்மாவுக்கு கடந்த வாரம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் நக்மா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சென்னை வந்துள்ள அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூய்மையான அரசியலே தமிழகத்திற்கு தேவை. அத்தகைய அரசியலை கொடுக்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளது.
காமராஜர் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தூய்மையான அரசியலை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சிறந்த அரசு இங்கே ஏற்பட வேண்டும். அனைத்துப் பெண்களும் முன்னேற்றம் காண வேண்டும்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள். அதற்காகவே பணியாற்றி வருகிறோம். கட்சியை முன்னேற்றுவது, வலுப்படுத்துவது குறித்து நாங்கள் பேசி வருகிறோம். எனவே தற்போது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த கேள்விக்கு இடமில்லை.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. இருப்பினும் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் அதையும் ஏற்பேன்.
இவ்வாறு நக்மா தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications