சென்னை ஆட்சியர், காவல் ஆணையரை இடமாற்றம் செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோரை இடமாறுதல் செய்வது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள பி அன்ட் சி மில் வளாகத்தில் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. சமீபத்தில் மில் மூடப்பட்டதையடுத்து குடியிருப்புகளை காலி செய்யும்படி தொழிலாளர்களிடம் கூறப்பட்டது.

ஆனால், அதனை எதிர்த்து இளங்கோவன் என்பவர் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மில் அமைந்திருக்கும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். அந்த இடத்தை தனியாருக்கு விற்க முடியாது. அந்த இடத்தை வாங்கிய நபர் எங்களை அங்கிருந்து காலி செய்யும்படி வற்புறுத்தி வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருத்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடந்தாண்டு உத்தரவிட்டார்.
ஆனபோதும், குடியிருப்பில் 6 வீடுகள் இடிக்கப்பட்டன. இது தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் புகார் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆணைய உறுப்பினர்கள் குடியிருப்பு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும், மாற்று ஏற்பாடுகள் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத் தரவை மதிக்காததால் சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி, சென்னை மாநகர் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், ‘சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோரை இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications