'அத்தாச்சி சசிகலா' பேரு இல்லையே.. ஓரங்கட்டியாச்சோ? சலசலக்கும் போயஸ் கார்டன் கல்யாண பத்திரிகை
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் கல்யாண வேலைகள் படுமும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இளவரசி மகனும் ஜாஸ் சினிமா நிர்வாக இயக்குநருமான விவேக்கின் நாளைய திருமணத்துக்குத்தான் இத்தனை பரபரப்பு....
முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் என கல்யாண பத்திரிகை அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த பத்திரிகையில் இளவரசி, திவாகரன், மகாதேவன், வெங்கடேஷ், இளவரசி மருமகன்கள் கார்த்திகேயன், ராஜராஜன் மற்றும் ஜெயானந்த் என ஒட்டுமொத்த மன்னார்குடி வகையறா குடும்ப பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

ஆனால் ஆச்சரியப்படும்படி இளவரசி வீட்டு திருமணத்தில் 'நாத்தனார்' சசிகலாவின் பெயர் மட்டும் இதில் இடம்பெறவில்லை. இந்த திருமண ஏற்பாடுகளை சசிகலாவின் சகோதரர் திவாகரன்தான் முன்னின்று ஏற்பாடு செய்தவர்.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அப்போது இளவரசியை போயஸ்கார்டனுக்கு அழைத்து வந்தவர் சசிகலா.
ஆனால் ஒரு கட்டத்தில் சசிகலாவை மீறி அதிகார மையமாக இளவரசி உருவெடுத்தார். சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமே அதிமுகவில் அதிகாரம் செலுத்திய காலம் உண்டு...
ஆனால் மெல்ல மெல்ல அந்த சாம்ராஜ்யம் சரிந்து போக இப்போது இளவரசியின் குடும்பத்தின் கைதான் போயஸ் கார்டனிலும் அதிமுகவில் ஓங்கி வருகிறது.
தற்போது இளவரசியின் வீட்டு கல்யாண பத்திரிகையில் சசிகலாவின் பெயரே இல்லாததால் அவர் ஒட்டுமொத்தமாக ஓரம்கட்டுவிட்டப்பட்டாரா? என விவாதிக்கின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications