'கவுரவ கொலை' செய்வார்கள்.. வழக்கு போட்ட பெண்ணுக்கு பாதுகாப்பளிக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: காதலனை திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் கவுரவ கொலை செய்துவிடுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்ணுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்தவர் மஞ்சு (வயது 19). அவர் தன்னுடைய காதலனான சுதாகர் என்பவரை கடந்த ஏப்ரல் 13ந் தேதி திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணத்தை ஏற்க மறுத்த அவரது பெற்றோர் இருவரையும் பிரித்து மஞ்சுவை ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பிவிட்டனர்.

ஹேபியஸ் கார்பஸ்
தன்னுடைய மனைவியை காணவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதாகர் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
பெற்றோருடன் சென்ற பெண்
இதனையடுத்து கடந்த ஜூலை 10ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான மஞ்சு, தான் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். அதன்படி மஞ்சுவை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.
மீண்டும் வழக்கு
ஆனால் சில நாட்களிலேயே நீதிமன்றத்தில் மீண்டும் மனு அளித்த மஞ்சு, தன்னை பெற்றோர்கள் மிரட்டியதாகவும், தன் மீதும், தன் கணவர் மீதும் குற்றவழக்குகள் பதிவு செய்து சிறைக்குள் தள்ளுவோம் என அச்சுறுத்தியதாகவும் கூறினார்.
கணவருடன் செல்லலாம்
இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன் மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களது முந்தைய உத்தரவுகளை திரும்ப பெற்ற நீதிபதிகள், மஞ்சு தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதால் வேறு எதைப்பற்றியும் யோசிக்கத்தேவையில்லை என்று கூறினர்.
பாதுகாப்பு
மேலும் மஞ்சுவின் பெற்றோரால் அவருக்கும் அவரது கணவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களை போலீசில் புகாரளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு புகார் அளிக்கப்பட்டால் போலீசார் இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் இருவரும் உத்தரவு பிறப்பித்தனர்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications