குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டு… கோவில்பட்டியில் பரபரப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நகராட்சி குப்பை வண்டியில் வெடிகுண்டு கிடந்தது. அதை வெடிக்கும் முன் போலீசார் கைப்பற்றியதால் ஊழியர்கள் உயிர் தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் முருகன் (49), சுந்தர் (40). இவர்கள் இருவரும் நேற்று காலை தள்ளுவண்டியில் செல்லப்பாண்டி நகர், ஆழ்வார் தெரு ஆகியவற்றில் சேர்ந்திருந்த குப்பைகளை வண்டியில் அள்ளினர்.

பின்னர் அவற்றை மில் தெருவில் உள்ள காலியான இடத்தில் கொண்டு வந்து குவித்தனர். அங்கிருந்து அவைகளை லாரியில் வேறு இடத்திற்கு எடுத்துச்செல்வது வழக்கம்.
இருவரும் குப்பையை தட்டிய பின் வண்டியை அங்கு நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றனர். திரும்பி வந்தபோது வண்டிக்குள் துணியால் சுற்றப்பட்ட ஒரு பொருள் கிடப்பதை கண்டனர். இதனால் பதறிப்போன அவர்கள் உடனே நகராட்சி நிர்வாகத்திற்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தனர்.
அந்த துணி பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் நாட்டு வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக வெடிகுண்டு மீது தண்ணீர் ஊற்றி அதை ஒரு வாளியில் எடுத்துச் சென்றனர்.
வெடிகுண்டை குப்பை வண்டியில் போட்டது யார், எதற்காக போட்டார்கள் என விசாரணை நடக்கிறது. வெடிகுண்டை சோதிக்க தூத்துக்குடியில் இருந்து வெடிகுண்டு நிபுணர் வரவழைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications