உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜகம்: சிபிஐ, சி.பி.எம். கண்டனம்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்வதும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அலுவலர்கள் எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்களை நிராகரிப்பதும் நடைமுறையாகி விட்டது.
குறிப்பாக, புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருக்கான தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜகவைச் சார்ந்தவர்கள் கடைசி நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு தடுத்து விட்டார்கள்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக புதுக்கோட்டை நகர்மன்ற ஆணையர் நேரம் முடிந்து விட்டது என்று கூறி வேட்புமனுவை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் சென்று முறையிட்ட போது, நகர்மன்ற ஆணையர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு துணையாக நின்றார்.
மாநிலத்தில் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளின் வேட்புமனுக்கள் எந்தக் காரணமுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்ப்பந்தத்தால் தேர்தல் அலுவலர்கள் சட்ட விரோதமாக ஆளுங்கட்சியின் அராஜகத்திற்கு துணையாக நின்றுள்ளனர்.
ஆளுங்கட்சியின் அராஜகத்தையும், ஜனநாயக விரோதப் போக்கையும் மற்றும் ஆளுங்கட்சிக்கு துணையாக இருக்கக் கூடிய தேர்தல் அலுவலர்களின் சட்ட விரோதமான நடவடிக்கையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வன்மையாக கண்டிக்கிறது. மேற்கண்ட ஜனநாயகப் படுகொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கு கண்டன இயக்கம் நடத்திட வேண்டுமென இரண்டு கட்சிகளின் மாநிலத் தலைமையும் கட்சி அணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. உள்ளாட்சி மன்றங்கள் ஜனநாயகபூர்வமாக செயல்பட, அடித்தள ஜனநாயகத்தை பாதுகாத்திட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென தமிழக வாக்காளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுகிறது,
இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications