''மூச்...ம்ஹூம்... கேக்கப்படாது.. கேக்கவேப்படாது.. ''- கடும் குழப்பத்தில் தா.பா அன்ட் கோ!
சென்னை: அதாவது... கை நிறைய லட்டைக் கொடுத்து விட்டு.. அந்த லட்டை சாப்பிடாதே.. இந்த லட்டை சாப்பிடாதே.. அதுவும் வேண்டாம்.. அட, இதையும் சாப்பிடாதப்பா என்று சொல்லிச் சொல்லியே கையில் இருக்கும் லட்டு பூராவையும் கொடுத்தவரே வாங்கி வாயில் அமுக்கிக் கொண்ட கதையாக இருக்கிறது... அப்படிப்பட்ட அபாயகரமா்ன நிலையில்தான் இப்போது தா.பாண்டியனும், அவரது கட்சியினரும் தள்ளப்பட்டுள்ளனராம்.
கூட்டணிக்குள் சேர்த்து கும்மாளமாக போஸ் கொடுத்து போட்டோவெல்லாம் எடுத்து அனு்பி வைத்த பிறகு இப்போது, இவர்கள் கேட்கும் ஒரு தொகுதி கூட கிடையாது என்ற ரேஞ்சுக்கு தோட்டத்திலிருந்து பதில் வந்துள்ளதாம்.
அதை விட அதி பயங்கரமான செய்தி என்னவென்றால்..எங்கெல்லாம் தா.பாண்டின் கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளதோ அந்தத் தொகுதிளெல்லாம் கிடையவே கிடையாது, அதையெல்லாம் கேட்கவே கூடாது என்று ஸ்டிரிக்ட்டாக சொல்லி விட்டார்களாம்.

மலச்சிக்கலை விட மோசமய்யா
தா.பாண்டியன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் படும் அவஸ்தை இருக்கிறதே .. அது மலச்சிக்கலை விட மகா மோசமானது. அப்படி ஒரு இடியாப்பச் சிக்கல்.

ஏன் இப்படி சிரமப்படுறாங்க...
எல்லாம் அதிமுக கொடுக்கப் போகும் ஒன்று அல்லது 2 சீட்டுக்காகத்தான் இத்தனை சிரமமும் இம்புட்டு கஷ்டமும்.

கேட்பது 3.. ஆனால் கிடைக்கப் போவது.. ஸ்பூனோ??
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பிலும் ஆளுக்கு 3 சீட்டுகளாவது கொடுக்க வேண்டும் என்று கேட்டு வைத்துள்ளார்களாம். ஆனால் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கார்டன் வட்டாரத் தகவல்கள் காற்றோடு வந்து போகின்றன.

அதை விட இதைக் கேளுங்க
அதை விட கொடுமை என்னவென்றால், சீட் பற்றி எதுவும் பேசாத அதிமுக தலைமை, ஒரு பெரிய்ய லிஸ்ட்டைக் கம்யூனிஸ்ட்கள் வசம் கொடுத்துள்ளதாம். அதில் ஏகப்பட்ட தொகுதிகள்.. அட, இதிலிருந்து சிலவற்றை செலக்ட் செய்யச் சொல்கிறார்களோ என்று செந்தொண்டர்கள் சந்தோஷத்தில் குதூகலிக்க.. ஸ்டாப், இந்தத் தொகுதியில் ஒன்றைக் கூட நீங்கள் கேட்கக் கூடாது.. ஓ.கே. என்று ஷாக் தகவல் பின்னாடியே வந்து சேர்ந்ததாம்.

அப்படியென்னப்பா அதுல இருக்கு...
அதாவது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர் ,வேலூர் ஆகிய 10 மாநகராட்சிகள் அடங்கிய எம்.பி சீட்களை மறந்து விட வேண்டுமாம், அதை நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாதாம்.

அப்ப??
இதில் பாதித் தொகுதிகளில் தோழர்களுக்கு பலம் இருப்பதாக பரவலாக ஒரு கருத்து உண்டு. அதாவது வடசென்னை, மதுரை, கோவை, திருப்பூர் ஆகியவற்றில் அவர்களுக்கென்று ஓரளவு வாக்கு வங்கி உண்டு. ஆனால் அதையே கேட்கக் கூடாது என்றால் அதைத்தான் கொடுப்பார்கள் என்று தோழர்கள் ரொம்பவே அதிர்ச்சியாகியுள்ளார்களாம்.

'கக்கூஸ்' கிடைச்சாலும் பரவாயில்லை
ஆனால் தோழர்களிடம் ஒரு நிலைப்பாடு (இது தா.பா அடிக்கடி பயன்படுத்தும் நிலையான ஒரு வார்த்தை) உறுதியாக இருக்கிறாம்.. அதாவது கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணியை விட்டு விலகுவதில்லை என்பதாம் அது...
முடியலைல்ல...?!












Click it and Unblock the Notifications