சீத்தாராம் யெச்சுரி மீதான இந்து சேனா தாக்குதலைக் கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, டெல்லியில் தாக்கிய இந்து சேனாவைக் கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை: மார்க்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, டெல்லியில் தாக்கிய இந்து சேனா கும்பலை கண்டித்தும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 CPI-M General Secy Sitaram Yechury were attacked yesterday, protest in Madurai

மதுரை செல்லூர் 60அடி ரோடு தாகூர் நகரில் மாநில குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் .ஜோதிராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நன்மாறன், விஜயராஜன் உள்ளிட்ட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள், யெச்சூரியை தாக்கியவர்களை கண்டித்தும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் அண்ணாதுரை பேசுகையில்,

'எங்கள் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சுரியை, இந்துத்துவா (ஆர்எஸ்எஸ்) கும்பல் செய்தியாளர்கள் போல் வேடம் அணிந்து வந்து தக்குதல் நடத்தி உள்ளனர் அவரை அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள்தான் பாதுகாத்துள்ளனர்.

இந்த தக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக மக்கள் சக்தி ஒன்றிணைந்து நாடுமுழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+