காங்கிரஸ்– பாஜக அல்லாத அணியில் இ.கம்யூனிஸ்ட்: நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 88-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான நல்லக் கண்ணு பங்கேற்று கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:
தொழிலாளர்களின் உரிமைக்காக இந்திய கம்யூனிஸ்டு போராடி உரிமைகளை பெற்றுக் கொடுத்தது. 88-ம் ஆண்டு துவக்கத்தில் நம்முன் நிற்கும் பிரச்சினைகள் ஏராளம்.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, சுரண்டல் ஜாதி கொடுமை உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து போராடும் நிலையில் உள்ளோம். இந்திய இறையான்மையை பாதுகாக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். இதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றார்.
அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறி வருகிறார்கள். உங்கள் கட்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் ‘சீட்' கிடைக்காவிட்டால் யாருடன் கூட்டணி சேருவீர்கள்? என்று செய்தியாளர்கள் நல்லக்கண்ணுவிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் இந்தியாவை அடகு வைத்து விட்டது. பாரதீய ஜனதா மத கலாசாரத்தை சீர் குலைக்கிறது. எனவே காங்கிரஸ்-பா.ஜனதா இல்லாத கட்சியில் நாங்கள் இடம் பெற்று நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என்றார்.
இதனிடையே காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத 3வது அணி அமைக்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
திருவாரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அ.தி.மு.க.வுடனான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் தொடரும் என்றார்.
காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தால் அப்போது கட்சியின் நிலை பற்றி பதில் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பயிர் காப்பீட்டு பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தா.பாண்டியன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications