கடலூரில் கீற்று மறைப்பில் இளம்பெண் குளித்ததை ஆளுநர் பார்த்ததாக பகீர் புகார்- ஊர்மக்கள் சுற்றிவளைப்பு
கடலூரில் இளம் பெண் குளித்துக் கொண்டிருந்ததை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பார்த்துவிட்டதாக பகீர் புகார் எழுந்துள்ளது.
Recommended Video

கடலூர்: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார்.

கடலூரில் ஆர்ப்பாட்டம்
கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார்.

கடலூரில் ஆய்வு
எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்.

பெண் அலறல்
அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர்.

போலீஸார் குழப்பம்
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications