ஏண்டா கஞ்சா விற்கலை.. காரமடை அருகே வாலிபரை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்
பழனி அருகே கஞ்சா விற்க மறுத்த இளைஞரை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி தப்பி சென்றது.
பழனி: பழனி அருகே காரமடையில் கஞ்சா விற்க மறுத்ததால் இளைஞர் ஒருவருக்கு சரமாரி வெட்டு விழுந்துள்ளது.
பழனி அருகே காரமடையை சேர்ந்தவர் சுரேஷ், 29. இவர் கொமரலிங்கத்தில் உள்ள தனியார் கறிக்கடையில் கறிவெட்டும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் பேருந்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியில் கஞ்சா வாங்க செல்லும்போது கஞ்சா விற்கும் கும்பலான மூக்கையா, பாஸ்கரன், ரஞ்சிதம் போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பல் நாளடைவில் சுரேஷை காரமடையில் கஞ்சா விற்று தருமாறு வற்புறுத்தியது.
ஆனால் அதற்கு சுரேஷ் மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த கும்பல் சுரேஷை பலமாக தாக்கியது. இதனால் இரு தரப்பினருமிடையே தகராறு நீடித்து வருகிறது.
இந்நிலையில், சுரேஷ், கறிவெட்டும் தொழிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை காரமடை பேருந்தில் வந்திறங்கினார். அப்போது ஏற்கனவே அங்கு மறைந்திருந்த கஞ்சா கும்பலை சேர்ந்த மூக்கையா, பாஸ்கரன், ரஞ்சிதம் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் உட்பட நான்கு பேர் சுரேசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.
இதனால் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடித்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராகொண்டிருந்த சுரேஷை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதுடன், இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications