வர்தா புயலால் ரூ.6,749 கோடி இழப்பு- கட்டங்கள், விவசாயம் சேதம், கால்நடைகள் இறப்பு
வர்தா புயலால் தமிழகத்தில் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் கணித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவான வர்தா புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை, கடுமையாக தாக்கியது. மணிக்கு, 192 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால், சென்னை சின்னாபின்னமானது.
சாலைகளிலும், தெருக்களிலும் நிறைந்திருந்த, ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன. புயல் தாக்கியும், மரங்கள் விழுந்தும், 10 ஆயிரம் மின் கம்பங்கள், 400 டிரான்ஸ்பார்மர்கள் செயலிழந்ததால், திங்கட்கிழமை காலை முதல் மின் வினியோகம் தடைபட்டது. 3வது நாளாக மின் விநியோகம் சீராகவில்லை. இன்னும் 3 நாட்கள் ஆகும் என்று எச்சரித்துள்ளது மின்சாரத்துறை.
வார்தா புயல் சென்னையை தாக்கி கரையை கடந்து சென்றது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அசோசெம் அமைப்பின் செயலாளர் டி.எஸ். ராவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாதிப்பு எவ்வளவு?
வர்தா புயலால் தமிழகத்தில் 6 ஆயிரத்து 749 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் பல ஆயிரம் மரங்கள் விழுந்தன. விவசாய நிலங்களுக்கும் இந்த புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டடங்கள் சேதம்
நகர்பகுதிகளில் கார்கள், இருசக்கர வாகனங்கள், தெருக்களில் தான் நிறுத்தப்படுகின்றன; அவை, மரங்கள் விழுந்து, உடைந்து சிதறின. மேலும், நுாற்றுக்கணக்கான வீடு, கடைகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டுள்ளன. மரங்கள் விழுந்து கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

பலத்த சேதம்
வாழைத் தோட்டங்கள், பப்பாளிப்பழ தோட்டம், வயல்கள் போன்றவை புயல் மற்றும் பலத்த மழையால் அழிந்துவிட்டன. பல இடங்களில் கால்நடைகள் இறந்துவிட்டன. நகர்ப்புறங்களில் கார்கள், கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

கடைகள் அடைப்பு
வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புறநகர் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில்கள் பாதிக்கப்பட்டன. கடைகள் மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளன.

போக்குவரத்து பாதிப்பு
புயலால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு, உணவு, உடை, நீர் சுத்திகரிப்பு உபகரணம் உள்ளிட்டவற்றை, தொழில் நிறுவனங்கள் தந்து உதவ வேண்டும். ரயில், விமானம், பஸ் போக்குவரத்து ஆகியவற்றுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, சுற்றுலா ஆகியவை பாதிக்கப்பட்டன.

ரூ. 6749 கோடி பாதிப்பு
ஒட்டு மொத்தமாக கணிக்கும்போது, வார்தா புயலால் ரூ.6 ஆயிரத்து 749 கோடி அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், முழு சேதத்தை மதிப்பிட, சில மாதங்களாகும். இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு அசோசெம் உறுப்பினர்கள் தேவையான உதவிகளை செய்யவேண்டும். உணவு, உடை, படுக்கைகள், போர்வை உள்பட அத்தியாவசிய தேவைகளை அசோசெம் அமைப்பின் உறுப்பினர்கள் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications