வர்தா புயல் எதிரொலி.. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் பாதிப்பை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் கரையைக் கடந்த போது வீசிய பலத்த காற்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பலத்த சூறைக் காற்றால் ஏராளமான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தன. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் மின் வினியோகம் இன்னும் சீராகவில்லை. சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூர், மடிப்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் மின் விநியோகம் ஓரளவுக்கு சீராகியுள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் மொபைல் டவர்கள், ஏடிஎம் இயந்திரங்கள் செயல் இழந்துள்ளன. இதன்காரணமாக, தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் சீற்றம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இதனால் அந்த மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். அதே போல் மூன்று மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications