ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் – சிபிஐ டி.ராஜா பேட்டி!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை ஏற்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரான டி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை ஏற்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

டி.ராஜா புதுவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "மோடி பிரதமராக வந்த பின்னர் பின்பற்றப்படும் கொள்கைகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளை பின்பற்றியே உள்ளது. விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக தேர்தல் பிரசாரம் செய்தனர்.
ஆனால் பணவீக்கம் அபாயகரமாக உள்ளது. கருப்புப்பணம் குறித்த நடவடிக்கை இல்லை. வருகிற 16 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதில் எங்கள் கட்சியும் பங்கு எடுத்து நிதி திரட்டி வருகிறது.
ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை ஏற்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. தீர்ப்பை எதிர்கொள்ள சட்டரீதியாக அணுக வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications