சபாநாயகர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல... சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே... துஷ்யந்த் தவே அதிரடி வாதம்
சபாநாயகர் என்பவர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல, சட்டத்துக்கு கட்டுப்பட்டவர் என்று தினகரன் தரப்பு எம்எல்ஏ துஷ்யந்த் தவே கேட்டு கொண்டார்.
Recommended Video

சென்னை: சபாநாயகர் என்பவர் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர் என்று தினகரன் தரப்பு எம்எல்அ துஷ்யந்த் தவே கேட்டுக் கொண்டார்.
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தினகரன் தரப்பினர் ஆளுநரிடம் கடிதம் அளித்து முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து கொறடாவின் உத்தரவை மீறி 18 பேரும் செயல்பட்டதாக சபாநாயகர் அவர்களை நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து அந்த 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் தினகரன் தரப்பு சார்பாக துஷ்யந்த் தவே ஆஜராகினார். அப்போது அவர் 18 பேர் நீக்கத்தால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தலாம்.
தேர்தல் நடத்துவதில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும். தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும். தகுதி நீக்க நோட்டீஸ் நேரிடையாக வழங்கவில்லை. சபாநாயகர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல- சட்டத்துக்கு கட்டுப்பட்டவர் என்றார் தவே.
இதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்தார்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications