தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நாளை மற்றும் 9ம் தேதி நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 11.15 நெல்லை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் இடம் கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர். பலரும் பகல் நேர ரயிலில் செல்ல தயாராகி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கடைசி நேரத்தில் புறப்படும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சனி மற்றும் திங்கட்கிழமை நவம்பர் 7, 9 ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவில்லாத 9 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும். இரவு 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
மறுமார்கத்தில் நெல்லையில் இருந்து நவம்பர் 8 மற்றும் 11ம் தேதிகளில் காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு அன்று இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications