சென்னையில் பட்டப் பகலில் பட்டா கத்தி முனையில் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சியால் பரபரப்பு!!
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வாகனத்தில் சென்ற பெண் ஒருவரிடம் பட்டா கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலம் செந்தில்.. எம்.சி.என் நகரில் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் தனது பணியை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபரால் வழிமறிக்கப்பட்டார்.

அப்போது பதற்றமடைந்து கீழே விழுந்த வேலம் மீது பெரிய அளவிலான கத்தியை நீட்டி அவரிடம் உள்ள நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார். அந்த சமயத்தில் மற்றொரு நபர் அருகே இருந்த சந்துப் பகுதியிலிருந்து வந்து மிரட்டலில் இணைந்துள்ளார்.
இதனை அடுத்து பயத்தில் தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி வேலம் தந்துள்ளார். சென்னை நகரில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரால் ஜன்னல் வழியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து எம்.சி.என் நகரைச் சேர்ந்தவர்களால் இந்த கொள்ளை குறித்து துரைப்பாக்கம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வீடியோவை ஆதாரமாக கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆசிரியையிடமும் கொள்ளையர்களின் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications