ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா அஞ்சலி.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்
மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளான இன்று அவரது அண்ணன் மகள் தீபா மெரினாவிற்கு சென்று நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அதிமுகவில் சசிகலா பிரிவு என்றும் ஓபிஎஸ் பிரிவு என்றும் இரண்டு அணிகள் பிரிந்து தமிழகத்தில் ஜெயலலிதா பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இதே போன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும் தனியாக ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

மலர் தூவி மரியாதை
இன்று காலையிலேயே மெரினாவிற்கு தனது ஆதரவாளர்களுடன் தீபா சென்றார். பின்னர், அவரது அத்தையான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

குழந்தைகளுக்கு கேட் ஊட்டி..
பின்னர், ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு மதுரைவாயலில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தீபா சென்றார். அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் ஊட்டி ஜெயலலிதாவின் பிறந்த நாளை தீபா கொண்டாடினார்.

மாலை அறிவிப்பு
ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இன்று அவர் தொடங்கியுள்ள பேரவையின் பெயரை தீபா வெளியிட உள்ளார். அப்போது பேரவையின் கொடியும் அறிமுகம் செய்ய உள்ளார் தீபா.

ஓபிஎஸ்ஸுக்கு டிமிக்கி
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து அரசியலில் பயணிக்க உள்ளேன் என்று கூறிய தீபா, இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது அதற்கு வாய்பில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று மாலை அவரது அரசியல் பயணம் குறித்து விரிவான தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications