எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெ. அண்ணன் மகள் தீபா மரியாதை
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான தொண்டர்கள் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் இன்று காலை எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்தனர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications