பணச் சிக்கலைத் தவிர்க்க ஆயத்த நிலையில் அரசு இல்லை.. ஒன்இந்தியா சர்வேயில் 59.3% ஆதங்கம்
முன்கூட்டியே புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து தயாராக இருந்திருக்க வேண்டும் என்று ஒன்இந்தியா நடத்திய சர்வேயில் 59.3 சதவீதம் பேர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாக கூடுதலாக ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து தயாராக வைத்திருக்க வேண்டாமா என்று ஒன்இந்தியா இணையதளம் வாசகர்களிடம் சர்வே நடத்தியது. அதற்கு 59.3 சதவீதம் பேர் முன்னெச்சரிக்கையாக ரூபாய் நோட்டுக்கள் தயாராக வைத்திருந்திருக்க வேண்டும் என்று தங்களது ஆதங்கத்தைத் வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக 11 கேள்விகளை தயாரித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. இந்தக் கேள்விகள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளி, குஜராத்தி ஆகிய 8 மொழிகளில் இடம் பெற்றன.

எட்டு மொழிகளில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 31,198 பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் தமிழில் மட்டும் அதிகபட்சமாக 24, 322 வாசகர்கள் பங்கேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாகவே கூடுதலாக ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து தயாராக வைத்திருக்க வேண்டாமா என்ற கேள்விக்கு, தயாராக இருந்திருக்க வேண்டும் என்று 59.3 சதவீதம் பேர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வெறும் 40.7 சதவீதம் பேர் மட்டுமே தயார் நிலையில் ரூபாய் நோட்டுக்கள் இருக்க வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications