18 உயிரை காவு வாங்கிய டெங்கு: ராஜபாளையத்தில் 20 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீர்
சென்னை: ராஜபாளையத்தில் 18 பேரை பலிகொண்ட டெங்கு காய்ச்சலுக்கு, முறையற்ற குடிநீர் விநியோகமே காரணம் என்று சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் டெங்கு கொசுக்கள் எளிதில் உற்பத்தியாவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் டெங்கு காய்ச்சலால் சுமார் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். காய்ச்சலின் தீவிரத்தால் சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் ராஜபாளைத்தில் முற்றுகையிட்டனர். மேலும் ராஜபாளையத்தில் டெங்கு பாதிப்பு தீவிரம் ஆனதற்கான காரணத்தை அறிய ஓய்வுபெற்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் 20 நாட்களுக்கு மேல் குடிநீரை சேமித்து வைத்ததே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கான முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

குடிநீர் விநியோகம்
ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை வீணாக்காமல் வீட்டின் மேல் உள்ள தொட்டிகள் மற்றும் பாத்திரங்களில் சேமித்து வைத்து பயன்படுத்தியுள்ளனர்.

கொசுக்கள் உற்பத்தி
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி என்ற வகை கொசு சுத்தமான தண்ணீரில்தான் உற்பத்தியாகிறது. அதுவும் 10 நாட்கள் தொடர்ந்து தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசு முழு வளர்ச்சி பெற்றுவிடும். இதுதான் ராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.

குடிநீர் சேமிப்பு
தற்போது ராஜபாளையம் நகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவே ஆபத்தான ஒன்றுதான். 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகித்தால், மக்களும் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க மாட்டார்கள்.
இதனால் டெங்கு காய்ச்சல் பரவுவதை முழுவதுமாக தடுத்துவிடலாம். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். வீடுகளில் 10 நாட்களுக்கு குடிநீர் சேமித்து வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு
வீடுகளில் தண்ணீர் வைத்துள்ள குடங்கள் மற்றும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். தேவையில்லாமல் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். அரசுடன் இணைந்து பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தால் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்துவிடலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications