இதுவரை 4000 டாஸ்மாக் ஊழியர்கள் மரணம்.. காரணம் மன உளைச்சல்!

Subscribe to Oneindia Tamil

குன்னூர்: தமிழகம் முழுவதும் மன உளைச்சல் காரணமாக இதுவரை 4000 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துள்ளதாக தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசே மதுக் கடைகளை நடத்துகிறது. அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் இந்தக் கடைகள் நடத்தப்படுகிறது.

இந்தக் கடைகளுக்கு அருகிலேயே தனியார்கள் மூலம் குடிமக்கள் நலனுக்காக பார்களையும் நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மன உளைச்சலால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

குன்னூரில் பயிற்சி முகாம்

குன்னூரில் பயிற்சி முகாம்

சங்கத்தின் சார்பில் குன்னூரில் 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பெரும் மன உளைச்சல்

பெரும் மன உளைச்சல்

முகாம் இறுதி நாளில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில் தாங்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாவதாக கூறினர்.

ஊழியர்கள் எண்ணிக்கை குறைகிறது

ஊழியர்கள் எண்ணிக்கை குறைகிறது

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 2003-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும், 36 ஆயிரம் ஊழியர்கள் டாஸ்மாக்கில் பணியாற்றிய நிலையில், ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது, 28 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

4000 பேர் மரணம்

4000 பேர் மரணம்

இதில், 4 ஆயிரம் பேர் வரை மன உளைச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அதிகாரிகளால் பாதிப்பு

அதிகாரிகளால் பாதிப்பு

பலர் பணிநீக்கம், பணியிடை நீக்கம் போன்ற உயர் அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகள் தொல்லை தாங்க முடியவில்லை

அரசியல்வாதிகள் தொல்லை தாங்க முடியவில்லை

மேலும், மதுக்கடை பார்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தலையீடு காரணமாக எங்கலைப்போன்ற பணியாளர்களுக்கு வெகுவாக பாதிப்பு ஏற்படுகிறது.

அரசு தலையிட வேண்டும்

அரசு தலையிட வேண்டும்

இப்பிரச்னையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்

டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் தேவை

ஓய்வூதியம் தேவை

எங்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு ரூ.70 ஆயிரம் என்பதை உயர்த்த வேண்டும்.

வார விடுமுறையும் தேவை

வார விடுமுறையும் தேவை

மற்றவர்களுக்கு உள்ளது போலவே, எங்களுக்கும் வார விடுமுறை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+