ஜெ.வுக்கு அமெரிக்காவில் சிகிச்சையளிக்க மறுத்தது யார்?? ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனியில் நடைபெற்ற திமுக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுவரைக்கும் அதிமுக கட்சியில் அனைவருமே தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் மரணத்திற்கு சசிகலாவும் அவரது குடும்பமும் தான் காரணம் என கூறிவந்தனர்.ஆனால் இதில் அப்பல்லோவுக்கும் பங்குள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா கொண்டு செல்ல
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூட்டத்தில் பேசியதாவது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது ஆபத்தான சூழ்நிலை என்றால் மருத்துவ பரிசோதனைக்காக ஜெயலலிதா அவர்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லலாம் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை கேட்டோம்.

நாங்களே குணப்படுத்துகிறோம்
அதற்கு அவர்கள் எங்கள் மருத்துவமனை மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா எதற்காக அமெரிக்கா கொண்டு செல்ல வேண்டும் நாங்களே ட்ரீட்மெண்ட் எடுத்து குணப்படுத்துகிறோம் என்றனர்.

மறுத்த அப்பல்லோ
ஜெயலலிதா அவர்களை மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப மறுத்தது அப்போலோ நிர்வாகம்தான் என ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தற்காலிக முதல்வராக இருந்தவரும் தற்போதைய தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சும்மாவிடமாட்டார்கள்
ஜெயலலிதாவை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சையளிக்க பல முறை வலியுறுத்தினேன் என்றும் ஜெயலலிதா குணமாகிவிட்டால் எல்லோரும் தப்பிப்போம். ஏதாவது ஆகிவிட்டால் தொண்டர்கள் சும்மாவிடமாட்டார்கள் என்றும் அப்பல்லோ நிர்வாகத்திடம் தான் கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் கேள்வி
மேலும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஒருமுறையாவது சந்திக்க விட்டீர்களா என்றும் அப்பல்லோ நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் .

ஓபிஎஸ் குற்றச்சாட்டு
இதுவரை ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க சசிகலா குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை என அதிமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம்தான் மறுத்தது என பொதுக்கூட்ட மேடையில் துணை முதல்வர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications