மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் ஓபிஎஸ் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உடைப்பு!
மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மதுரை: தோப்பூரில் அமைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்து திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் கடந்த நவம்பர் மாதம் அதிமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதாவது ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மற்றும் இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்ட வெற்றியை கொண்டாடுவதற்காக இந்த விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது. இதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

கொடி கம்பத்தில் கல்வெட்டு
முப்பெரும் விழாவை முன்னிட்டு தோப்பூரில் 100 அடி உயர அதிமுக கொடிகம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடி கம்பத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டது.

கல்வெட்டில் பெயர்
இந்த கல்வெட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரும், அதேபோன்று புறநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரும் இடம்பெற்றது.

கல்வெட்டில் பெயர் இல்லை
ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் கல்வெட்டில் பதிக்கப்படாமல் இருந்தது. இதற்கு ஓபிஎஸின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவிக்கவே கொடிக்கம்பத்தின் பக்கவாட்டின் ஓபிஎஸ் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பின்னர் பதிக்கப்பட்டது.

ஓபிஎஸ் உடைப்பு
இந்நிலையில் ஓபிஎஸ் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மட்டும் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கல்வெட்டை உடைத்தது யார் என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications