For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் வரவேற்புரையாற்றி ஓ.பிஎஸ்ஸின் சுவாரஸ்ய பேச்சு!

மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்க வந்த பிரதமரை வரவேற்று பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் உரையாற்றிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி- வீடியோ

    சென்னை : மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்க வந்த பிரதமரை வரவேற்று பேசும் போது மட்டும் ஆங்கிலத்தில் உரையாற்றிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

    சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடக்க விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய வரவேற்புரை:

    Deputy CM O Paneerselvam welcomes PM with english speech

    மறைந்தும் மறையாமல் நம் மனதை விட்டு ஒரு கனம் கூட மறையாத ஜெயலலிதாவை வணங்கி, உழைக்கும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தந்திருக்கும் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிஜி மற்றும் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளை வரவேற்கிறேன்.

    நாம் அனைவரும் இங்கு ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இங்கு ஒன்று கூடிஇருக்கிறோம். உழைக்கும் பெண்களுக்காக ஜெயலலிதா மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததும் அதனை ஏற்று தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் பிரதமருக்கு மிகவும் நன்றி.

    Deputy CM O Paneerselvam welcomes PM with english speech

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்புறவை பாராட்டியவர் நரேந்திர மோடி. ஜெயலலிதாவை போலவே மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர் பிரதமர் மோடி, இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளிலும் நட்பு பாராட்டுபவர்.

    ஜெயலலிதா மக்களின் நலனுக்காக குறிப்பான மகளிரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தவர். இன்று அவர் அறிவித்த நல்ல திட்டங்களில் ஒன்றான ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது. நிச்சயமாக இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.

    English summary
    Deputy CM O.paneerselvam welcomes PM Modi for TN scooty distributing scheme to working woman, and the part of welcoming PM portion is in english in his speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X