துடிப்பான நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்
துடிப்பான நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமண விழாவுக்கு சென்ற போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் உடனே பிரிந்தது.

இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகர், நடிகைகள் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
My Heartfelt Condolences to the untimely and unfortunate demise of the veteran,versatile and vibrant actress @SrideviBKapoor . Her impeccable life and illustrious career has impressed every one surpassing generations! May her soul rest in peace.
— O Panneerselvam (@OfficeOfOPS) February 25, 2018
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது இரங்கல் செய்தியில் கூறுகையில், நடிகை ஸ்ரீதேவியின் அகால மரணம் துரதிருஷ்டவசமானது. பன்முகத்தன்மை, துடிப்பான நடிகையான இவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஒழுக்கமான வாழ்க்கையும் அனுபவமிக்க நடிப்புத் தொழிலும் தலைமுறைகளை கடந்து அனைவராலும் மெச்சிக்கப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications